Tuesday, April 17, 2018

காற்றின் பெயர்கள்


தமிழ் மொழியில் அனைத்து பெயர்களுக்கு காரணம் உள்ளது. அது மட்டுமின்றி ஒரு வார்த்தையிளிலும், ஒரு எழுத்திலும் காரணம் மற்றும் பொருள் அர்த்தம் உள்ளன. அது போல காற்று வகைப்படுத்தப் பட்டுள்ளது.


அவை முறையே:

1) தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல்
2) வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை
3) கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்
4) மேற்கிலிருந்து வீசும் காற்று மேலை

என்று காற்றை வகைப்பட்டுத்தியது மட்டும் இல்லாமல் அதன் வேகத்தைப் பொருத்தும் வகைப்பாடு செய்தான்.


1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"
2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"
3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"
4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"
5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"
6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"
7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"
8) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"

No comments:

Post a Comment